News April 6, 2024
ஐபிஎல் தொடரில் இருந்து ஹசரங்கா விலகல்

SRH அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின்போது ஹசரங்காவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. தற்போது காயம் முழுமையாக குணமடையாததால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது SRH அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News November 4, 2025
பெண்களுக்கு தாலி கட்டாயம் இல்லை: சின்மயி கணவர்!

தாலி அணிவது பெண்களின் விருப்பம், அது கட்டாயம் இல்லை என சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சின்மயியிடமும் திருமணத்திற்கு பிறகு தாலி அணிவது உன்னுடைய விருப்பம் என கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ராகுலின் இயக்கத்தில், ரஷ்மிகா நடித்துள்ள ‘The Girlfriend’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
News November 4, 2025
இன்று முதல் 12 மாதங்கள் FREE

இன்று முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாக பெறலாம் என OpenAI அறிவித்திருந்தது ✤அதை பெற, ChatGPT-யின் Homepage-க்கு செல்லவும் ✤மேலே உள்ள ‘Upgrade for free’ஐ கிளிக் செய்யவும் ✤Go (Special Offer)-ஐ கிளிக் செய்யவும் ✤இதற்கு ₹2 கட்டணமாக வசூலிக்கப்படும் ✤கட்டியவுடன் உங்களுக்கு 12 மாதங்களுக்கு Free ChatGPT GO கிடைக்கும். இதை செய்த பிறகு, மறக்காமல் Auto Pay ஆப்ஷனை Off செய்து விடுங்கள்.
News November 4, 2025
எந்தெந்த தேதியில் +2 பொதுத்தேர்வு.. முழு விவரம்

* 2/03/25 – தமிழ், மொழிப்பாடங்கள் * 5/03/25 – ஆங்கிலம் * 9/03/25 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் *13/03/25 இயற்பியல், பொருளாதாரம் * 17/03/25 – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் * 23/03/25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் * 26/03/25 – கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல்


