News March 10, 2025
கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்.
பொருள்:
ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.
Similar News
News March 10, 2025
கிராம நத்தம் நில ஆவணங்கள் ‘ஆன்லைன்’ மயமாகிறது

கிராம நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ‘தமிழ் நிலம்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிராமங்களில் உள்ள நத்தம் நில ஆவணங்களில் உள்ள பல சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 10, 2025
MP தமிழச்சி தங்கபாண்டியன் சரமாரி கேள்வி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
News March 10, 2025
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இதில் பட்ஜெட் தொடர்பாக 13 மசோதாக்களையும், மணிப்பூர் மாநில பட்ஜெட்டையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.