News October 24, 2025
பெரிய PDF-களை படிக்க கஷ்டமா இருக்கா? இதோ Solution

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோடு செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.
Similar News
News October 24, 2025
Cinema Roundup: கவினின் ‘மாஸ்க்’ ரீலிஸ் டேட் அப்டேட்!

✦கவின்- ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ✦TTF வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘IPL’ படத்தின் டீசர் வெளியானது✦’டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ✦தெலுங்கில் தான் நடித்த ‘பரதா’ படத்தின் ரிசல்ட் தன்னை மிகவும் வருத்தமடைய வைத்ததாக அனுபமா தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தீவிர ஆலோசனை

Montha புயல் எதிரொலியால், தமிழ்நாட்டிற்கு மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 24, 2025
விராட் கழுத்தின் மேல் கத்தி: இர்ஃபான் பதான்

ODI-யில் விராட் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி பார்த்ததே இல்லை என இர்ஃபான் பதான் கூறியுள்ளார். SM அழுத்தம் காரணமாகவே விராட் இப்படி விளையாடுகிறார் என்ற அவர், அழுத்தங்களை Ro-Ko பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், கழுத்தின் மேல் கத்தி தொங்கும்போது சிறப்பாக விளையாட முடியாது எனவும், ரன் எடுக்காத வேளையில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


