News December 6, 2024

கடன் வாங்குவதில் சிக்கல் இருக்கா?

image

வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால் அரசிடம் தெரிவிக்கும்படி மினிஸ்டர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார். MSME நிறுவனங்களுக்கு கடன் மட்டுமல்லாது, வேறு வழிகளில் நிதி திரட்டவும் உதவ அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறைந்து வருவதாக தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கூடுதல் பிணை, வட்டி குறித்தும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News November 23, 2025

21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

image

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2025

சர்வதேச விழாவில் ராணுவத்தை பெருமைப்படுத்திய SRK

image

மும்பையில் நடந்த சர்வதேச அமைதி விருதுகள் விழாவில், மும்பை (26/11), பஹல்காம், டெல்லி தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தினார். பின்பு, பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என யாராவது கேட்டால், நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லுங்கள்; என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், 140 கோடி மக்களின் ஆசிர்வாதங்களை சம்பாதிக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.

error: Content is protected !!