News November 15, 2024
Friends-களோட ஜாலியா இருங்க பாஸ்..!

கல்யாணத்திற்கு பிறகு நண்பர்களை சந்திக்கும் வழக்கம் குறைவது இயல்புதான். ஆனால், ஆண்கள் வாரத்திற்கு 2 முறையாவது நண்பர்களை சந்தித்து ஜாலியாக பேசுவது, அவர்களது உடல் நலத்திற்கு நல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கவலை, மன அழுத்தம் குறையவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஸ்ட்ராங் ஃப்ரண்ட்ஷிப் உதவுவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News August 27, 2025
சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு தேவை: SC

சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
News August 27, 2025
அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.