News October 3, 2025
உங்க வங்கி கணக்கில் ₹350 குறைந்துவிட்டதா?

டெபிட் கார்டு பயனர்களுக்கான வருடாந்தர பராமரிப்பு கட்டணத்தை வங்கிகள் பிடித்தம் செய்யத் தொடங்கிவிட்டன. டெபிட் கார்டின் வகையை பொறுத்து கட்டணம் மாறுபடும். Classic/Silver/Global Contactless கார்டுகளுக்கு ₹236 கட்டணமும், Gold/Combo/My Card கார்டுகளுக்கு ₹250+GST-யும், Platinum கார்டுக்கு ₹325+GST-யும், Pride/Premium பிசினஸ் கார்டுகளுக்கு ₹350+GST-ம் பிடிக்கப்படும். உங்க கணக்கில் பணம் குறைந்ததா?
Similar News
News March 13, 2026
வந்தாச்சு ‘டிசைனர் அரிசி’.. நீரிழிவு பிரச்னைக்கு தீர்வா?

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசியை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்காகவே புது ‘டிசைனர் அரிசி’யை உருவாக்கி இருப்பதாக CSIR-NIIST விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதில் சாதாரண அரிசியை(6-8%) விட புரதச்சத்து(20%) அதிகமாம். மேலும், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 இருப்பதால் ரத்த சோகை பாதிப்பையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 13, 2026
பரபரப்பு ட்விஸ்ட்: திமுக கூட்டணியில் இணைந்தார்

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
News March 13, 2026
CSK மீது புகார் அளித்துள்ள SUN Network!

தோனியை ரஜினியுடன் ஒப்பிட்டு மாஸாக CSK வெளியிட்டு வரும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், CSK-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி நெட்வொர்க். இனி CSK விளம்பரங்களில் ஜெயிலர், கூலி பட பாடல்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேள SRH-க்கு யூஸ் பண்ண போறாங்களோ?


