News August 26, 2024
வாடிவாசல் பட பணிகள் தொடங்கியதா?

‘வாடிவாசல்’ படம் வருமா, வராத என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் தாணு கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை 2-ஐ முடித்துவிட்டு வெற்றிமாறனும், S44 படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் வாடிவாசல் படத்தில் பணியாற்றவுள்ளதாக தெளிவுபடுத்திய அவர், ‘ஜூராஸிக் பார்க்’ படத்திற்கு CGI வொர்க் செய்த ILM நிறுவனம், வாடிவாசலுக்கான முன்னோட்ட அனிமேஷன் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Similar News
News July 5, 2025
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து PK விலகல்

விஜய்யின் தவெகவிற்கான அரசியல் ஆலோசனைக் குழுவில் இருந்து பிரசாந்த் கிஷோர் (PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தனது (ஜன் சுராஜ்) கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்துவதால் விலகியுள்ளார். நவம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் இடம் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 5, 2025
TVK கோரிக்கை ஏற்க HC மறுப்பு..!

இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பை கண்டித்து தவெக சார்பில் ஜுலை 3யில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரி HC-யை நாடியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாள்களுக்கு முன்பே போலீசாரிடம் மனு வழங்க வேண்டும் என்றனர். இதனால் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு மனு வழங்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
வடிவேலு, ஃபகத் ஃபாசில் படத்தின் புது அப்டேட்

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘மாரீசன்’ படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் வருகிற ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலு, ஃபகத் இணைந்து ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.