News April 18, 2025

ஊருக்கு கிளம்பி விட்டாரா SRH கேப்டன்?

image

நடப்பு IPL சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸின் மனைவி பெக்கி கம்மின்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவது போன்ற போட்டோக்கள் இருக்கின்றன. அதில், ‘Goodbye India’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 19, 2025

வங்கதேசத்தில் இந்து தலைவர் அடித்து கொலை

image

பங்களாதேஷ் பூஜா உத்ஜபான் பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பாபேஷ் சந்திரா ராய் (58) அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த அவரை சிலர் கடத்திச் சென்று கொலை செய்ததாக ராயின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கொலை நிகழ்ந்துள்ளது.

News April 19, 2025

₹584 கோடி.. லாபத்தில் செழிக்கும் Just Dial

image

Just Dial நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 61% அதிகரித்து, தற்போது ₹584.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2025 நிதியாண்டின் காலாண்டில், அந்நிறுவனம் ₹157.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும், மொத்த வருவாய் ₹1,142 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024-ஐ காட்டிலும் 9.5% அதிகமாகும். அதேபோல், 4-வது காலாண்டில் இந்த தளத்தை பயன்படுத்திய பயனர்களின் எண்ணிக்கை 191.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

News April 19, 2025

மார்டனாகும் மெட்ராஸ்: ஜூன் முதல் மின்சார பஸ்!

image

சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!