News August 7, 2025
மக்களின் வாழக்கை தரம் உயர்ந்திருக்கிறதா? இபிஎஸ்

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது மக்களை ஏமாற்றக் கூறும் மாபெரும் பொய் என EPS விமர்சித்துள்ளார். உண்மையிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளதா, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினார். இரட்டை இலக்க வளர்ச்சி என மாயத்தோற்றத்தை திமுகவினர் உருவாக்குவதாகவும் கூறினார். கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கையே காரணமென்றார்.
Similar News
News April 3, 2026
வெள்ளி ஆபரணங்கள்.. கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹800 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால் இன்றும் 1 கிராம் வெள்ளி ₹255-க்கும், 1 கிலோ ₹2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஏப்.1-ல் 1 கிலோ ₹2.65 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ₹10,000 குறைந்துள்ளது. இன்று முதல் 3 நாள்கள் விடுமுறை என்பதால், வெள்ளி நகை பிரியர்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.
News April 3, 2026
டெல்லி தலைமைக்கு டிமாண்ட் வைத்த அண்ணாமலை ?

தமிழ்நாடு பாஜக தலைமையோடு முரண்பாடு ஏற்பட்டதால், அண்ணாமலையை டெல்லி தலைமை தொடர்ந்து சமரசம் செய்து வருகிறதாம். இந்நிலையில், கோவை வடக்கு தவிர வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்றும், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் எனவும் டெல்லி தலைமையிடம் அண்ணாமலை உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
நூடுல்ஸால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமா?

இன்ஸ்டான்ட் நூடுல்ஸால், குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படலாம் என்கிறார்கள். ஆம், இந்தியாவில் விற்கப்படும் பல நூடுல்ஸ்களில் US, ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் அதீத சோடியம், Empty கலோரிகள்(சத்து குறைவு, மைதா அதிகம்) உள்ளன. இதனால் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஆசைக்கு மாசம் ஒருமுறை சாப்பிடலாமாம்.


