News April 2, 2024

பிரதமருக்கு இப்போது தான் ஞானோதயம் வந்ததா?

image

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாமே, இனிமேல் ஆட்சிக்கு வந்து மீட்பேன் என்றால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு ஞானோதயம் வந்ததா?. கச்சத்தீவு தமிழக மீனவர்களுக்கு வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. உலக நீதிமன்றத்தை நாடி கச்சத்தீவை மீட்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

பாஜகவின் அடிமையா? Ex.அமைச்சரின் ஒரே வரி Reply

image

சிறுபான்மை ஓட்டு இனி திமுகவுக்கு கிடைக்காது என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று திமுகவினர் சொல்வதற்கு பதிலளித்த அவர், நாங்கள் பாஜகவுக்கு அடிமையல்ல, நண்பர்கள் என்றார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிதான் தங்களுக்கு முக்கியம் எனவும், ஆட்சிக்கு வந்ததும் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

படுக்கைக்கு அழைப்பு.. நடிகை எஸ்தர் நோரானா தடாலடி!

image

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சிலரால் சினிமாவின் தரம் கெடுவதாக நடிகை எஸ்தர் நோரானா கூறியுள்ளார். இந்த தலைமுறையினர் சினிமாவில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவர், முன்பு அப்படி இல்லை என்றார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் தவறானவர்கள் என்றால், அதற்கு உடன்படுவோரும் தவறானவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இவர் தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

News February 12, 2026

விஜய் கட்சி ஆரம்பித்திருக்க கூடாது: சீமான்

image

ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால், விஜய் ஆட்சியின் தரம் எப்படி இருக்கும் என சீமான் கேட்டுள்ளார். இந்த கட்சிகள் பிடிக்காமல்தான் விஜய் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், பிறகு அதே கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என அவர் சொல்வதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வளவு தூய கட்சி ஏற்கெனவே இருக்கிறதென்றால் விஜய் கட்சி ஆரம்பித்திருக்க கூடாது என கூறியுள்ளார்.

error: Content is protected !!