News October 16, 2024
விஷப்பூச்சி நுழைந்து விட்டதா? கவலை வேண்டாம்

மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள், பொதுமக்கள் வசிப்பிடங்கள், கார் போன்ற வாகனங்களில் நுழைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரத்தில் தயக்கமின்றி தீயணைப்புத் துறை, வனத்துறையிடம் மக்கள் உதவி கோரலாம். இதற்காக, சென்னை பகுதி மக்களுக்கு 044 – 22200335, 1903 ஆகிய எண்களும், மற்ற மாவட்ட மக்களுக்கு 1077 என்ற அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. சூரியக் குடும்பத்தின் மையத்தை கண்டிபிடித்தவர் யார்?
2. சங்க இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நூல் எது?
3. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கிய ஆண்டு எது?
4. ‘சரிகமபதநிச’ என்ற ஸ்வர வரிசை எந்த ராகத்தை குறிக்கிறது?
5. அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.. அவள் யார்?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 18, 2025
BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. கட்சி பேதமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.