News April 12, 2024
என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா?

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. காங்., சார்பில் செய்யப்பட்ட சுவர் விளம்பரத்தில் கை சின்னத்துடன் “தேர்தல் 19.4.23” என எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எதிர்தரப்பினர், தேர்தல் நாளையே காங்., கட்சி மாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.
Similar News
News January 13, 2026
நான் வெறும் பவுலர் மட்டும் அல்ல: ஹர்சித் ராணா

NZ-க்கு எதிரான முதல் ODI வெற்றியில் ஹர்ஷித் ராணா (29 ரன்கள் + 2 விக்கெட்கள்) முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில், அணி நிர்வாகம் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்துகிறேன் எனவும், பேட்டிங்கில் 8-வது விக்கெட்டில் இறங்கி தன்னால் 30-40 ரன்களை குவிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 13, 2026
செங்கோட்டையனுடன் இணையும் அடுத்த தலைவர்

அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என EPS திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் தவெகவா, திமுகவா என கன்ஃபியூஷனில் இருந்த OPS-ஐ, செங்கோட்டையன் காண்டாக்ட் செய்ததாக தகவல் கசிந்துள்ளது. தவெகவுக்கு வந்தால் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என KAS டீல் பேச, OPS-ம் தை 1-ம் தேதி பதில் சொல்கிறேன் என சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. புதிய அறிவிப்பு வந்தது

நாளை(ஜன.14) போகிப் பண்டிகை அன்று அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையிலிருந்து 5,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.


