News June 5, 2024
பாமக தயவால் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்ததா?

பாமகவுக்கு வாக்கு வங்கி இருக்கும் இடங்களில்தான் பாஜகவின் வாக்குகள் அதிகரித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.2% ஆக உயர்ந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து பாஜக விளையாடியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
Similar News
News March 30, 2026
நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் மறைவு: குவியும் இரங்கல்

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் <<19513252>>ஸ்வர்ணலதா(86)<<>> மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்வர்ணலதா, பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 நாள்களுக்கு முன்னர், தனது தாயாருடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரகாஷ் ராஜ், தற்போது மீள முடியாத துயரில் ஆழ்ந்துள்ளதாக அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க கூறினர். #RIP
News March 30, 2026
நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எமகண்டம் என்பதால், இருவரும் நல்ல நேரத்தில் 12.10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
திமுக ஆட்சி நடத்துச்சா, வேற எதாவது நடத்துச்சா? விஜய்

தீயசக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என பெரம்பூர் பிரசாரத்தில் பேசிய விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை என்ற அவர், முதியவர்களுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். மேலும், 5 வருடங்களாக திமுக ஆட்சி நடத்தினார்களா அல்லது வேற எதாவது நடத்தினார்களா எனவும் சாடியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>


