News June 22, 2024
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறியதா?

மக்களவை இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறிவிட்டதாக கேரள காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 8ஆவது முறையாக மக்களவைக்கு எம்.பி.,யாக தேர்வாகியுள்ள மூத்த உறுப்பினரான தன்னைத் தான் மக்களவை இடைக்காலத் தலைவராக நியமித்திருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தனது சுயநலத்துக்காக பாஜக தொடர்ந்து விதிகளை மீறி வருகிறது எனத் தெரிவித்தார்.
Similar News
News September 13, 2025
ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார். ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு அன்பு அறிவு இயக்கத்தில் கமல் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் படங்களின் எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இப்படத்தில் பணியாற்றவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது.
News September 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 457 ▶குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். ▶பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
News September 13, 2025
மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை: ஆதவ் அர்ஜுனா

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தால் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1967-ல் சாமானிய புரட்சி, 1977-ல் சரித்திர புரட்சி என்ற வரிசையில் 2026-ல் விஜய் தலைமையில் தமிழகம் ஜனநாயக புரட்சியை சந்திக்கும் என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.