News July 10, 2025
ஆஷா போன்ஸ்லே காலமானாரா? மகன் மறுப்பு

பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இது அவரின் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் சமுகவலைதளங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்தத் தகவலை ஆஷா போன்ஸ்லேயின் மகன் ஆனந்த் போன்ஸ்லே மறுத்துள்ளார். ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை, அவர் நலமாக உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News July 11, 2025
தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.
News July 11, 2025
நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News July 11, 2025
மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.