News November 18, 2024
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி பதவியேற்பு!

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றியது. அதன் பின்னர், இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் ஹரிணி ஆவார்.
Similar News
News August 28, 2025
‘பிரதமர் மோடியை காணவில்லை’

BJP-க்கு எதிராக வாக்கு திருட்டு புகார் கூறிவரும் காங்கிரஸ், ஒருபடி மேலே சென்று PM மோடியை காணவில்லை என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது. காங்.,யின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், மோடியின் போட்டோவுடன், ‘காணவில்லை.. பெயர்: நரேந்திர மோடி, இவர் வாக்காளர் பட்டியலில் மோசடி, வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவதில் வல்லவர்’ என கடுமையாக விளாசியுள்ளது. காங்கிரஸின் போஸ்ட் தற்போது இணையத்தில் டிரெண்டாகிறது.
News August 28, 2025
Work-ஐ தொடங்கிய நடிகர் ஜெய்

ஜெய் நடிக்கும் ‘WORKER’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ரீஷ்மா நனையா ஹீரோயினாகவும், யோகி பாபு, பிரவீனா பிரமோத் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதல், காமெடி. ஆக்ஷன் கலந்த படமாக ‘WORKER’ உருவாகவுள்ளது. சில ஆண்டுகளாக ஜெய் நடித்த படங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால், இந்த படத்தை அவர் பெரியளவில் நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.
News August 28, 2025
இந்தியாவை சீண்டுவதா? டிரம்ப்பை சாடும் எதிர்கட்சிகள்

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை கண்டிக்காமல், இந்தியா மீது அதிக வரிவிதிப்பதாக டிரம்ப்பை ஜனநாயகக் கட்சியினர் சாடியுள்ளனர். இந்த வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இந்தியா – அமெரிக்க உறவை நாசப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இந்த வரிவிதிப்பிற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் எனவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.