News March 30, 2025
ஹர்திக் பாண்டியாவுக்கு ₹12 லட்சம் அபராதம்

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறித்த நேரத்தில் மும்பை அணி பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் அபராதம் விதிக்கப்படும் முதல் கேப்டன் ஹர்திக்தான். நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
Similar News
News January 19, 2026
நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News January 19, 2026
பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.
News January 19, 2026
உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.


