News April 5, 2025
உடைந்து போன ஹர்திக்..!

ஹர்திக் நேற்று அணியை சரியாக வழிநடத்தவில்லை என சில MI ஃபேன்ஸ் விமர்சிக்கின்றனர். அதேநேரம், பவுலிங்கில் 5 விக்கெட், பேட்டிங்கில் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 28 ரன்கள் என தனது பங்கை சரியாகவே செய்திருக்கிறார். ஆனாலும், டீம் தோற்று விட்டதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்ணீர்விட்ட காட்சி வைரலாகி வருகிறது. MI அணியின் தோல்விக்க்கு என்ன காரணம்?
Similar News
News December 1, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிச.1-ம் தேதி (இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச.13-ம் தேதி பணி நாளாக இருக்கும். மேலும், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 1, 2025
One last time.. ஹேப்பி டிசம்பர்!

ஆண்டின் கடைசி மாதம் வந்தாச்சு. இந்த 11 மாதம் உங்களின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பாருங்கள். நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். என்ன தவறிழைத்தீர்கள், எதில் முன்னேற்றம் காண வேண்டும் என கவனியுங்கள். ஒரு வருடம் வீணாகிவிட்டதே என வருந்த வேண்டாம். 2025-ன் கடைசி பக்கத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுங்கள்.. செயலில் இறங்குங்கள். ஹேப்பி டிசம்பர்!
News December 1, 2025
பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தவெக: உதயநிதி

செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரு கட்சியின் வேறு ஒரு கிளைக்கு தாவியுள்ளார் என உதயநிதி விமர்சித்துள்ளார். இதனால், தவெக ஒரு சுதந்திரமான கட்சி இல்லை என்ற அவர், பாஜகவின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அமித்ஷாவின் ஆலோசனைப்படியே செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


