News April 14, 2024
பிரித்வி மீது கொலைவெறியான ஹர்பஜன் சிங்

DC அணியின் நிர்வாகத்தில் தான் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை நிச்சயம் அடித்திருப்பேன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ப்ரித்வி ஷா ஷாட்டை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தப் போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
Similar News
News December 10, 2025
கரூர்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News December 10, 2025
ஒரே நாளில் விலை ₹8,000 உயர்ந்தது… புதிய RECORD

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹207-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்.15-ல் புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை, பின் படிப்படியாக குறைந்தது. அதன்பின் சர்வதேச சந்தை எதிரொலியால் மீண்டும் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹8,000 உயர்ந்துள்ளது.
News December 10, 2025
ப்ரீ புக்கிங்கிலேயே சாதனை படைக்கும் படையப்பா!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது ப்ரீ புக்கிங்கிலேயே தெரிகிறது. இன்னும் படம் வெளியாக 2 நாள்கள் உள்ள நிலையில், தற்போது வரை சுமார் ₹30 லட்சத்துக்கு டிக்கெட்கள் புக்காகி இருக்கிறதாம். அதிக வசூலை அள்ளிய ரீ-ரிலீஸ் படமாக ‘படையப்பா’ மாறும் என விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


