News June 16, 2024
கோலியை விமர்சிக்க மறுத்த ஹர்பஜன்

நடப்பு உலகக்கோப்பையில் விராட் கோலி 5 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரை விமர்சிக்க மறுத்துள்ள ஹர்பஜன் சிங், நியூயார்க் மைதானம் ஆடுவதற்கு கடினமானது என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழலில், ஒருவரின் திறனை எடைபோட விரும்பவில்லை எனவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 2, 2026
தவெக கூட்டணி முடிவு எப்போது? செங்கோட்டையன்

மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் கூட்டம் என தவெகவும் ஒருபுறம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் தவெகவுடன் இதுவரை பெரிய அளவிலான கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், தவெக கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும், அது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News March 2, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <
News March 2, 2026
சற்றுமுன்: பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 80,285 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 24,854.50 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.


