News September 13, 2025
BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
Similar News
News September 13, 2025
மயிலாடுதுறை: ஆயில் நிறுவனத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 13, 2025
CPI மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முத்தரசன் இப்பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
News September 13, 2025
இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.