News August 9, 2024

நாட்டிற்காக பதக்கம் வெல்வது மகிழ்ச்சி: நீரஜ்

image

தாய் நாட்டிற்காக பதக்கம் வெல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று பாக்., வீரர் அர்ஷத் நதீமிற்கான நாள் என்றும், அவர் தான் தன்னைவிட சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், தற்போது நமது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றாலும், வருங்காலத்தில் உறுதியாக இசைக்கப்படும் என முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்க?

image

எப்போதாவது நெட்டி முறித்தால் பிரச்னை இல்லை. ஆனால் அடிக்கடி நெட்டி முறிப்பதால் சில பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், 45 வயதை கடந்தவர்கள் அடிக்கடி நெட்டி முறித்தால், முழங்கால் வீக்கம், தசைநார் பிடிப்பு, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு கைகளை அவ்வப்போது உட்படுத்துவது அவசியம்.

News January 9, 2026

சதத்தில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

image

விஜய் ஹசாரே தொடரில் நேற்று கோவாவுக்கு எதிராக சதம்(131) அடித்த ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகளையும் படைத்துள்ளார். அதாவது, VHT-ல் அதிக சிக்சர்களை(112) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதேபோல் VHT-ல் அதிக சதம் அடித்த வீரரான அன்கித் பாவ்னேவின்(15) சாதனையையும் அவர் சமன் செய்தார். முதல் தர போட்டிகளில் ரன்களை வாரிக்குவித்தாலும் ருதுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சவாலாகவே உள்ளது.

News January 9, 2026

வரலாற்றில் இன்று

image

*1788 – அமெரிக்காவின் 5-வது மாநிலமாக கனெடிகட் இணைந்தது.
*1915 – தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி மும்பை வந்து சேர்ந்தார்.
*1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. *1951 – நியூயார்க்கில் ஐநா தலைமையகம் திறக்கப்பட்டது.
*1951 – நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிறந்ததினம்.
*1976 – நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த தினம்.

error: Content is protected !!