News May 16, 2024
ட்ரெண்டிங்கில் Happy Retirement Legend ஹேஷ்டேக்

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்துள்ள நிலையில், X தளத்தில் Happy Retirement Legend என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கோலி உள்ளிட்ட பிரபலங்களும் அவருக்கு அன்பை பரிமாறியுள்ளனர். தனது சகோதரரை நினைத்து பெருமை கொள்வதாக X பக்கத்தில் கோலி பதிவிட்டுள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.
Similar News
News November 22, 2025
இன்று 13 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
News November 22, 2025
215 பள்ளி மாணவர்கள் கடத்தல்: பெற்றோர் கண்ணீர்!

நைஜீரியாவில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் 215 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய கும்பல் பள்ளியை தாக்கி 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றது. ஏற்கெனவே இந்த வார தொடக்கத்தில் மற்றொரு பள்ளியில் மாணவிகள் 25 பேர் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் 2-வது கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பெற்றோர்கள் பிள்ளைகளை காணாமல் கதறி வருகின்றனர்.


