News December 8, 2024
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அதிரடி உத்தரவை சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்! டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக தேவராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற கடைகள், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு, இதை நிறைவேற்ற டாஸ்மாக் கடைகளுக்கு 2 மாதங்கள் கெடு விதித்துள்ளது.
Similar News
News March 3, 2026
மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு நாட்டிலேயே நிச்சயமாக இருக்க முடியாது என்று CM ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை சிறிய குளறுபடி இல்லாமல் சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, உயர்த்தப்பட்ட தொகை ₹2,000, திமுக ஆட்சி அமைந்தால் ஜூனில் இருந்து வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?

தஞ்சையில் நாளை தவெக நிர்வாகிகளை விஜய் சந்திக்கவிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் அறிக்கைக் குழுவுடன் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளையை நிர்வாகிகள் சந்திப்பின்போது தவெகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
News March 3, 2026
கனடாவிடம் யுரேனியம் வாங்கும் இந்தியா!

அரிய வகை கனிமங்கள் துறையில் இந்தியா-கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PM மோடி – கனடா PM மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைக்காக, ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியத்தை 2035 ஆண்டு வரை கனடா வழங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.


