News October 25, 2024
ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வேட்டையன் படத்திற்கு பிறகு கூலி படத்தில் நடிகர் ரஜினி நடித்து வந்தார். இடையே திடீரென உடல்நிலை பாதிக்கப்பட அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ரஜினி, 2 வாரமாக ஓய்வு எடுத்து வந்தார். இதனால் கூலி பட சூட்டிங் தடைபட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரஜினி மீண்டும் நடித்தார்.
Similar News
News November 24, 2025
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கனமழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 29-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருங்க நண்பர்களே!
News November 24, 2025
சாக்பீஸை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.


