News October 26, 2025
வாகன ஓட்டிகளுக்கு HAPPY NEWS

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் பைக், ஸ்கூட்டர் அனைத்திலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ABS) கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ABS அம்சம் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.
Similar News
News October 27, 2025
அதிகமுறை விருது குவித்த இந்திய கிரிக்கெட்டர்கள்

அணிக்காக தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் பலர் உள்ளனர். இருப்பினும் அவர்களில் சிலர் மட்டுமே, அதிகமுறை தொடரின் நாயகன் விருதை வென்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். முதலிடத்தில் யார் என்று பார்த்து, கமெண்ட்ல சொல்லுங்க.
News October 27, 2025
‘பைசன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா?

‘பைசன்’ படத்தில் பிரபஞ்சன் கேரக்டரில் கலையரசனும், அனுபமாவின் அண்ணன் கேரக்டரில் ஹரியும் (‘மெட்ராஸ்’ ஜானி) நடிக்க இருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் 20 நாள்கள் கடுமையான கபடி பயிற்சி வழங்கப்பட்டதாகவும், இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலம் ஆகும்: சீமான்

தமிழ்நாட்டில் SIR மேற்கொண்டால், இதுவும் இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இந்தி பேசக்கூடிய வடமாநிலத்தவர்கள் இங்கு ஒன்றரை கோடி பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்து பாஜகவிற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தமிழர்களை சொந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.


