News October 9, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரையான கடன்களுக்கு வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் MCLR இனி 8.40% முதல் 8.65%-மாக இருக்கும். இதனால் பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன் வாங்கியோருக்கு வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை 0.5 முதல் 1.5% வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. SHARE
Similar News
News October 9, 2025
மாமனிதர் ரத்தன் டாடாவின் நினைவு நாள்

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. டாடா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றியவர். அதைவிட, அவரது எளிமை, கொடை உணர்வு, சிறந்த தலைவருக்கான பண்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. புகழ்ச்சியை எப்போதும் விரும்பாத ரத்தன் டாடா, அதி தீவிர உழைப்பாளி. தனது நிறுவன ஊழியர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். அவரிடம் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.
News October 9, 2025
BREAKING: விஜய்யை அதிர வைத்தவர் கைது

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முகமது சபீக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய்யை வீட்டிலேயே முடக்கும் நோக்கில் மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது சொந்த ஊரான குமரிக்கு விஜய் வந்தால், கரூரில் ஏற்பட்டதுபோல் துயரம் நிகழும் என அச்சமடைந்ததாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
News October 9, 2025
கரூர் மக்களை விஜய் எப்போது சந்திக்கிறார்? புது தகவல்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் விஜய். இந்நிலையில், இம்முறை அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அக்.13-ல் தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பை நடத்த போலீசிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.