News September 22, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.

Similar News

News September 22, 2025

வைஷாலிக்கு தமிழக அரசு பணி

image

செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு, தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் பணிக்கான நியமன ஆணையை, CM ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், கால்பந்து வீராங்கனை சுமித்ரா, கூடைப்பந்து வீராங்கனை சத்யா, பாய்மரப்படகு வீரர் சித்ரேஷ் ஆகியோருக்கும் அரசு பதவிக்கான பணி நியமன ஆணைகளை CM வழங்கினார். இவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

உ.பி.,யில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை

image

அலகாபாத் HC-ன் உத்தரவை அடுத்து, FIR, அரஸ்ட் வாரண்ட் உள்பட போலீஸ் ஆவணங்களில் சாதிப் பெயரை பயன்படுத்த கூடாது என்று உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ் பலகை, வாகனங்களிலும் சாதிய அடையாளங்களுடன் கூடிய வாசகங்களை உடனடியாக அழிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சாதி பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

News September 22, 2025

அண்ணாமலை – டிடிவி சந்திப்பு: மீண்டும் கூட்டணியா?

image

NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி-ஐ அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து டிடிவி விலகிய நிலையில், தமிழக நலனுக்காக அவரை சந்திப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் சந்தித்து 1:30 மணி நேரம் ஆலோசித்ததாகவும், அப்போது டிடிவி-ஐ மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!