News October 29, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபரில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI நவம்பர் முதல் குறைகிறது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும்.
Similar News
News October 29, 2025
பண மழையில் நனையும் 3 ராசிகள்

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *துலாம்: தொழிலில் பிரகாசமான முன்னேற்றம். தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். *தனுசு: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். *மகரம்: வேலையில் ஊதிய உயர்வு. வியாபாரம் செழிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
News October 29, 2025
‘Baahubali: The Epic’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்

<<18096213>>‘Baahubali: The Epic’ <<>>படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இதில் நீளம் கருதி பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். அவந்திகாவின் காதல் கட்சிகள், மனோகரி, கண்ணா நீ தூங்கடா, பச்சை தீ நீயடா உள்ளிட்ட பாடல்கள், சில போர் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 29, 2025
தூங்கும் முன் குழந்தைகளுக்காக இத பண்ணுங்க

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் குழந்தையிடம் 5 நிமிடங்கள் மனம் விட்டு பேசுங்கள். நாள் முழுக்க என்னென்ன செய்தார்கள், எது அவர்களை கஷ்டப்படுத்தியது, பிடித்த விஷயங்கள் எது, கற்றுக்கொண்டது என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன், அவர்களும் நிம்மதியாக உணர்வார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.


