News April 2, 2025
லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

வங்கிகளில் லோன் வாங்குபவர்களை பாதுகாக்க RBI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது: அவை *கடன் வழங்குபவர்கள், கடன் காலத்தை அதிகரிக்கும் முன் கடனாளியின் ஒப்புதல் பெற வேண்டும் *வட்டிவிகித மாறுபாடால் EMI (அ) tenure-ஐ மாற்றினால், தெரிவிக்க வேண்டும் *கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் EMI அதிகரிப்பு (அ) காலநீட்டிப்பு கூடாது. வட்டி, மற்ற விதிகள் பற்றிய விவரங்களுடன் கடன் அறிக்கையை(KFS) முன்கூட்டி தரவேண்டும்.
Similar News
News March 21, 2026
தங்கம் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹10,000 குறைந்தது

கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹10,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று 1 சவரன் ₹1,08,960-க்கு விற்பனையாகும் நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் பதற்றம் மற்றும் அமெரிக்க Fed Rate நிலைத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
தமிழக தேர்தலை நிறுத்தக் கோரி மனு.. காரணம் என்ன?

தமிழக தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் KK ரமேஷ் என்பவர் SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போலீஸாரின் செயல்பாட்டில் திருப்தியில்லை உள்ளிட்ட காரணங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை இம்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
சமரச பேச்சுவார்த்தை: CPM அலுவலகத்தில் வைகோ

சென்னை தி.நகரில் உள்ள CPM அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளார். தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து CPM வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வைகோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது.


