News October 23, 2024

KGF ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 3ம் பாகம் உறுதியானது

image

KGF-3ஆம் பாகம் நிச்சயம் எடுக்கப்படும் என்று யாஷ் தெரிவித்துள்ளார். முதல் 2 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அந்தப் படத்தின் 3ஆவது பாகம் எடுக்கப்படுமா, இல்லையா என்ற கேள்வி நிலவியது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிடம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த யாஷ், சரியான நேரம் வருகையில் பிரமாண்டமாக எடுக்கப்படும் என கூறினார்.

Similar News

News August 22, 2025

Parenting:குழந்தை ஃபோன் பார்த்துட்டே சாப்பிடுதா? உஷார்

image

குழந்தைகள் சாப்பிட மறுப்பதால் Modern பெற்றோர் அவர்கள் கையில் ஃபோனை கொடுத்து உணவை ஊட்டுவதை வழக்கமாக்கிவிட்டனர். ஆனால் அப்படி செய்வதால் குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறதாம். ஃபோன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னைகளில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்து குறைபாடு, கவனச்சிதறல், குடும்பத்துடன் பிணைப்பு இல்லாமல் போவது போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமாம். உஷார் பெற்றோர்களே!

News August 22, 2025

‘அம்மா, அப்பா நான் சாகப்போறேன்’.. சோக முடிவு

image

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 22, 2025

இனி இ-பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

image

<<16434322>>இ-பாஸ்போர்ட்<<>> சேவை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதற்கு முதலில் இ-பாஸ்போர்ட் இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெற்று, பின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெரிபிகேஷனை முடிக்க வேண்டும். இது வழக்கமான பாஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்ஷன் தான். ஆனால், அதற்கு மாற்று கிடையாது. பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

error: Content is protected !!