News April 28, 2025
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு HAPPY NEWS!

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.
Similar News
News December 6, 2025
டூத் பிரஷை மாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம்

சாஃப்டாக இருக்க வேண்டும், டங்க் கிளீனர் இருக்க வேண்டும் என்று நாம் தேடி தேடி வாங்கும் டூத் பிரஷை, குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது அவசியமானது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் டூத் பிரஷை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த 3 மாதத்திற்குள் நார் தேய்ந்தாலும் பிரஷை மாற்றிவிட வேண்டும். அதேபோல், காலாவதியான டூத் பிரஷை கொண்டு வேறு பொருள்களையும் சுத்தம் செய்யக்கூடாது. ஷேர் பண்ணுங்க.
News December 6, 2025
காப்பீடு நிறுவனத்தில் ₹97,000 சம்பளம்.. Apply பண்ணுங்க

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ₹96,765 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது. இப்பணிக்கு வரும் 15-ம் தேதிக்குள் https://orientalinsurance.org.in.careers என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.
News December 6, 2025
12 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும் போது குடையை மறக்காதீங்க. கவனமாக இருங்க மக்களே..


