News October 20, 2024
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு HAPPY NEWS

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதம் தலா ₹1500 என 2 ஆண்டுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கு இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.
Similar News
News August 21, 2025
அண்ணா, MGR வழி விஜய்க்கு கைகொடுக்குமா?

அண்ணா & MGR போன்று விஜய் அரசியலில் நீண்ட பயணம் கொண்டவர் அல்ல என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ‘நற்பணி மன்றம், மக்கள் இயக்கம் மூலம் நாங்க அப்பவே அப்பிடி’ என Virtual warriors கூறினாலும், இரு ஆளுமைகளின் அரசியல் பயணம் பெரிதே என்கின்றனர். அதேநேரம், 1967-ல் திமுக கூட்டணியில் 8 கட்சிகள், 1977-ல் அதிமுகவுடன் CPI, CPM கூட்டணியில் இருந்தன. தவெகவுக்கு பெரும் சவாலாக மாறுமா 2026 தேர்தல்?
News August 21, 2025
தடகளம்: பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்

64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான போல் வால்ட்டில் கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புது சாதனை படைத்துள்ளனர். 100 மீ ஓட்டத்தில் தமிழரசு, ராகுல் ஆகியோர் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் தனலெட்சுமி, அபிநயா ராஜராஜன் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
News August 21, 2025
பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை: வைகோ

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பெயர் இடம்பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வைகோ கூறியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி நீடிக்கும் என்றார். திமுகவுக்கு இருக்கும் பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை என்றாலும், மதிமுக தொண்டர்கள் வீரர்கள் போல் உறுதியானவர்கள் என தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் மதிமுகவின் செல்வாக்கு உயருமா?