News March 9, 2025
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

CBSE 10th மாணவர்கள் தமிழ் தேர்வுக்கு 6 பாடப்பிரிவுகளை மட்டும் படித்து தேர்வெழுதிய நிலையில், சமச்சீர் கல்வி மாணவர்கள் 9 பாடப்பிரிவுகளை படித்தனர். இதனால், மாணவர்கள் அவதிப்படுவதாகவும், CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக பாடப் பிரிவுகளை குறைக்கவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ஒன்பது பாடப்பிரிவுகள் 7-ஆக குறைக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பம், ஆளுமை பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 10, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகிலேயே தவறான செயல் வேறெதுவும் இல்லை
– மார்ட்டின் லூதர் கிங்.
News March 10, 2025
விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த ரோஹித்

டெஸ்டில் நியூசி., அணியிடம் தோல்வி.. ஆசி.,யிடமும் இதே நிலை.. இதுதவிர ஃபார்ம் இல்லாததால் பிரச்சனை.. ரோஹித்துக்கு CT தான் முடிவு என பலரும் விமர்சிக்க.. இதற்கெல்லாம் தனது கேப்டன்சியுடன் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் 4 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து முடிவு சரியானது என்பதை நிரூபித்தார். கோப்பையை வென்று அவரை விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் நீட்ட வைத்தார்.
News March 10, 2025
ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.