News August 26, 2024
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

நீங்கள் அனுப்பிய கிருஷ்ண ஜெயந்தி போட்டோக்கள் எங்களிடம் நிரம்பி வழிகின்றன. way2news மீது அளவற்ற அன்பை காட்டியதற்கு நன்றி. ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எங்களுக்கு வந்துள்ள நிலையில், அளவு கட்டுப்பாடுகள் காரணமாக சில புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகிறோம். உங்களது புகைப்படங்களை வெளியிட முடியாமல் போனதற்காக வருந்துகிறோம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் way2news சார்பாக கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
Similar News
News November 23, 2025
ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.
News November 23, 2025
தற்குறி அல்ல, TN அரசியலை மாற்றப்போகும் அறிகுறி: விஜய்

தவெக தொண்டர்களை, GenZ கிட்ஸ்களை தற்குறிகள் என திமுகவினர் அழைப்பதாக விஜய் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தற்குறிகளா என கேள்வி எழுப்பிய அவர், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இதுதானா எனவும் கேட்டுள்ளார். மேலும், மக்கள் தற்குறி அல்ல தமிழகத்தின் ஆச்சரியக்குரி எனவும் அரசியலை மாற்றப்போகும் அறிகுறி எனவும் அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.
News November 23, 2025
‘ஆர்யன்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிப்பில், பிரவீன் கே இயக்கியுள்ள ‘ஆர்யன்’ படம் அக்.31-ம் தேதி வெளியானது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், கடைசி பாதி ஸ்லோவாக இருந்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.


