News October 19, 2025
தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்

அன்புக்குரியவர்கள், நண்பர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். *மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த பண்டிகையை.. தீபாவளி நல்வாழ்த்துகள். * அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி எங்கும் பரவட்டும். *தீமைகள் ஒழிந்து நன்மை ததும்பட்டும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
Similar News
News October 19, 2025
சென்னையில் ஓடும் காரில் நடிகைக்கு பாலியல் தொல்லை

புனேவை சேர்ந்த துணை நடிகை ஆஸ்தா, DUDE பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகாரளித்துள்ளார். அக்.11 அன்று நிகழ்ச்சிக்கு காரில் சென்றபோது, டிரைவர் கணேஷ் பாண்டியன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை ஆஸ்தா அளித்த புகாரின்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், கார் டிரைவர் கணேஷ் பாண்டியன் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 19, 2025
எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்: ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அவசரகால செயல்பாட்டு மையத்தில் CM ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளதாக தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதால் நெற்பயிர்கள் சேதமடைவதாக EPS கூறியது குறித்த கேள்விக்கு, அது தவறான செய்தி என ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
News October 19, 2025
தமிழகத்தின் டாப் 10 பழமையான கோயில்கள்

விஞ்ஞானிகளையே வியப்புக்குள்ளாக்கும் தமிழர்களின் கட்டட கலைக்கு கோயில்கள் மிகப்பெரிய சான்று. நுணுக்கமான சிற்பங்கள், எக்காலத்துக்கும் பொருள் தரும் ஓவியங்கள், நவீன தொழில்நுட்பத்தாலும் சாத்தியமாக்க முடியாத வடிவமைப்புகள் என அனைத்திலும் தமிழன் தனித்துவமானவனே. அப்படிப்பட்ட தமிழகத்தின் தொன்மையான 10 கோயில்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்து வியந்த கோயிலின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.