News January 16, 2025
ஹேப்பி பர்த்டே விஜய் சேதுபதி!!

இன்னொரு ஹீரோ படத்தில் வில்லனாக நடித்தால் இமேஜ் குறையும், வயசான ரோல் பண்ணா மார்க்கெட் குறையும் என எந்த ஒரு டெம்ப்ளேட் ஹீரோ இமேஜில் சிக்காமல், தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகின் மோஸ்ட் வாண்டட் நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. பீட்சா கொடுத்து சின்னதாக ஆரம்பித்து குமுதா ஹேப்பி அண்ணாச்சி என அழுத்தமாக காலூன்றி மகாராஜாவாக நிற்பவரின் வயது இன்று 46. அவர் நடித்து உங்களுக்கு பிடித்த ரோல் எது?
Similar News
News August 9, 2025
விவாதமாக மாறிய திருமாவின் சர்ச்சை பேச்சு

MGR குறித்து திருமா விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. உண்மையில் MGR பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா அல்லது எம்ஜிஆரை முன்னிறுத்தி அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனை ஆண்டுகள் கழித்து MGR குறித்து திருமா விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்; திருமாவின் விமர்சனம் ஏற்புடையதா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
News August 9, 2025
எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன்

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என திருமா தெரிவித்துள்ளார். ஒரு பார்ப்பனிய பெண் (ஜெயலலிதா) திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் MGR என விமர்சித்த திருமா, கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என கூறுகிறார்கள், எம்ஜிஆர், ஜெ., குறித்து பேசுவது கிடையாது. தமிழக அரசியலின் மையமாக இருப்பது கருணாநிதி எதிர்ப்பு மட்டும்தான் என சாடினார்.
News August 9, 2025
நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: EPS

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது என்றார். மேலும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.