News August 17, 2024
கோடம்பாக்கத்தின் ஜேம்ஸ் கேமரூனுக்கு பிறந்தநாள்!

பிரம்மாண்டம், பிரமிப்பு இந்த இரு சொற்களையும் குறிக்கும் ஒரே வார்த்தை இயக்குநர் ஷங்கர். யாரும் பேசா பொருளை பேசுபொருளாக்கிய ஜென்டில் மென், ஊழலுக்கு எதிரான இந்தியன், 61 வயதிலும் அசராமல் உழைக்கும் எந்திரன், தமிழ்த் திரையுலகின் அந்தஸ்தை உயர்த்திய கேம் சேஞ்சர் இப்படியாக ஷங்கர் இன்றும் உயர்ந்துகொண்டே செல்கிறார். அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.
Similar News
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.
News November 6, 2025
30 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 30 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகையாக தலா ₹2.50 லட்சம் செலுத்தினால் உடனடியாக விடுதலை ஆகலாம் என்றும், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.


