News October 23, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக். 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News October 24, 2025
விஜய் ரசிகர்கள் தற்குறிகள்: ஜி.பி.முத்து

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News October 24, 2025
அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு!

சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News October 24, 2025
இன்று உலக போலியோ தினம்!

கொடிய நோயான போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 24-ம் தேதி ‘உலக போலியோ தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ‘Every Child, Every Vaccine, Everywhere, is a call to ensure that no child, in any setting, is left unprotected’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.


