News September 21, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப். 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 22, 2025
ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.
News August 22, 2025
எல்லாராலும் MGR ஆக முடியாது: விஜய் பற்றி ஜெயக்குமார்

தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் எம்ஜிஆர் குறித்து விஜய் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய EX அமைச்சர் ஜெயக்குமார், இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்ஜிஆர் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார். எல்லோராலும் MGR, ஜெயலலிதா ஆகிவிட முடியாது எனக் கூறிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்த கை, ஒரு காலத்திலும் வேறு கட்சிக்கு வாக்களிக்காது என்றார்.
News August 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 435 ▶குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். ▶ பொருள்: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.