News December 12, 2024
HAPPY BIRTHDAY
: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (டிச.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 20, 2025
இன்ஃபோசிஸ் அறிவித்த 80% போனஸ்.. யாருக்கு கிடைக்கும்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. PL – Performance Level 6 மற்றும் அதற்கு கிழே உள்ள இளநிலை, மத்திய நிலை ஊழியர்களுக்கு சராசரியாக 80% போனஸ் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% அதிகரித்து ₹6,921 கோடியாகவும், வருவாய் 7.5% அதிகரித்து ₹42,279 கோடியாகவும் உயர்ந்துள்ளன.
News August 20, 2025
பேச்சுவார்த்தைக்கு முன்வந்த ரஷ்யா

உக்ரைனுடன் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. அரசியல், ராணுவம், மனிதநேய நடவடிக்கைகள் குறித்து பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. டிரம்ப் – புடின், டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்புகளுக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் 3 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
News August 20, 2025
பாஜக அணியில் பாமக, தேமுதிக.. திடீர் திருப்பம்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ராமதாஸ், பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CP ராதாகிருஷ்ணன் நல்ல தேர்வு என ராமதாஸ் கூறியுள்ள நிலையில், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் அவர்கள் NDA அணியில் இணைவதற்கான அச்சாரம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.