News December 21, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (டிச.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டில் சாகும் வரை சிறை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிலிப்ராஜ் (30). இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் மேஸ்திரியிடம் வேலை செய்து கொண்டு அங்கேயே மற்ற தொழி லாளிகளுடன் தங்கி இருந்துள்ளார். 1.1.2011 அன்று சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் பிலிப்ராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News March 4, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $222.88 (இந்திய மதிப்பில் ₹20,426) குறைந்து $5,129.72-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $6 குறைந்து $83.21-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News March 4, 2026
திமுகவுக்கு இந்த அகம்பாவம் இல்லை: ரகுபதி

NDA கூட்டணி என்பது இடியாப்ப சிக்கல் போன்றது. அதில், யார் பெரியவர் என்பது இதுவரை தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதையும், திமுக கூட்டணியையும் ஒப்பிட முடியாது என்ற அவர், மக்களிடம் சாதனைகளை சொல்லியே வாக்குகளை பெறமுடியும் என்றார். மேலும், தேர்தலில் சவால்கள் இல்லை என்று அகம்பாவமாக சொல்ல முடியாது எனவும் திமுக எது வந்தாலும் சமாளிக்கும் என்றும் பேசியுள்ளார்.


