News December 6, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News November 21, 2025
விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி

கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் <<18345318>>சேலத்தில்<<>> இருந்து தனது பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கரூரை போல எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, அக்கட்சியின் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் அவர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
News November 21, 2025
இன்றுடன் விடைபெறும் CJI கவாய்

சுப்ரீம் கோர்ட் CJI-ஆக BR கவாய்க்கு இன்று கடைசி நாளாகும். வரும் 23-ம் தேதியுடன் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நாட்டின் 53-வது CJI-ஆக சூர்யகாந்த் வரும் 24-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்ப்பற்றவனாக இருந்தேன் என கவாய் தெரிவித்தார்.
News November 21, 2025
கூட்டணி அமைச்சரவை உருவாகும்: பிரேமலதா

2026-ல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும், கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் மக்களும், தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை சாத்தியமா?


