News November 12, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News December 8, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
News December 8, 2025
புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
News December 8, 2025
ஸ்டாலினின் இந்து மத வெறுப்பு: வானதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை ஸ்டாலின் வெளிப்படுத்துகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என 1920-ல் இருந்தே நீதிமன்றத்தில் உரிமை போராட்டம் இருந்து வருவதாக கூறிய அவர், அப்போது பாஜகவும் இல்லை, RSS-ம் இல்லை என தெளிவுப்படுத்தியிருக்கிறார். அத்துடன், 1920-ல் நடந்ததை CM அரசியல் என்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


