News October 25, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News February 5, 2026
மும்பை டிராபிக் ஜாம்.. ஹெலிகாப்டரில் பறந்த நபர்!

எரிவாயு லாரி கவிழ்ந்ததால், மும்பை – புனே நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 20-22 கி.மீ வரை வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க, தொழிலதிபர் சுதிர் மெஹ்தா ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். வானில் இருந்து டிராபிக் ஜாமின் போட்டோக்களை பதிவிட்ட அவர், இது போன்ற பாதிப்பில் இருந்து தப்ப, நெடுஞ்சாலைகளில் Emergency Exit-களை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
News February 5, 2026
லோக்சபாவில் 22 ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம்

PM உரை இல்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பேச விடவில்லை என கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரை இல்லாமல் சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் சபை தொடங்கியவுடன் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரையின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2004-ல் PM மன்மோகன் சிங்கை பாஜக நன்றி உரை தெரிவிக்கவிடாமல் செய்தது.
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. ECI முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பிப்.11-ல் தமிழகம் வரவுள்ளனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.


