News December 14, 2024
சனி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் அனுமன் வழிபாடு

சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டால், சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. காலையில் குளித்து அருகில் உள்ள அனுமன் அல்லது அனுமன் சன்னதி இருக்கும் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அனுமன் சாலிசாவை 11 முறை கூறி, அனுமனின் சன்னதியை சுற்றி வரவும். மல்லிகைப்பூ எண்ணெய் படைப்பது உகந்ததாகும். அனுமனுக்கு பிடித்த ராம நாமத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டும்
Similar News
News August 14, 2025
கொலை வழக்கில் நடிகர், நடிகை மீண்டும் கைது

ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் உள்பட 17 பேர் கைதாகி இருந்தனர். தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், ஜாமினை ரத்து செய்து SC உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
News August 14, 2025
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம்: காங்கிரஸ் சாடல்

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், தெலங்கானாவிற்கு வர இருந்த ஆலையை, ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தெலங்கானாவில் இருந்து குஜராத்துக்கு ஒரு தொழிற்சாலை சென்றதாக குறிப்பிட்ட அவர், பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் சாடினார்.
News August 14, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் நாளை அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். <