News April 4, 2025
ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Similar News
News November 29, 2025
மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி

மாத்தூர் பிரவீன் மஹால் திருமண மண்டபத்தில் இன்று (நவ 28), மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, சைக்கிள் மிக்ஸி சோபா ஆகியவற்றை மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் வழங்கினார்கள்.
News November 29, 2025
ராசி பலன்கள் (29.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
TVK-வில் Ex அமைச்சர்கள் இணையவுள்ளனர்: KAS

முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் முன்மொழிந்த தன்னை, EPS அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக செங்கோட்டையன் சாடியுள்ளார். மேலும் EPS தலைமையில் ஒரு தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பரில் தவெக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்றும், இன்னும் சில Ex அமைச்சர்களும் விஜய்யுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


