News August 14, 2024
குற்றவாளியை தூக்கிலிடுங்கள்: மம்தா ஆவேசம்

கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் பொய் பிரசாரங்கள் பரப்பப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், நடந்த சம்பவத்திற்காக தன்னை குற்றஞ்சாட்டுங்கள். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தை குற்றஞ்சாட்ட வேண்டாம்
எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 27, 2025
சேலம்: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

சேலம் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.


