News August 7, 2024
ஹமாஸ் புதிய தலைவராக சின்வர் தேர்வு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெளி உலகிற்கு அதிகம் தெரியாவிட்டாலும், ஹமாஸ் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவராக அறியப்படும் அவர், இஸ்ரேல் மீது கடந்தாண்டு (அக்.,7) நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அண்மையில், ஈரானில் மொஸாட்டால் கொல்லப்பட்ட ஹனீயேவின் நெருங்கிய நண்பரான இவர், காசாவிலேயே தங்கி, பல ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.
Similar News
News November 14, 2025
ராசி பலன்கள் (14.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 13, 2025
எந்த திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?

குறிப்பிட்ட சில திசைகளில் தலைவைத்து படுப்பது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளாகும். குறிப்பாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்து தூங்குவது புகழை சேர்க்கும் என நம்பப்படுகிறது. வடக்கிலே தலை வைத்துப் படுத்தால் வம்சம் விருத்தியடையாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். மேலும், தெற்கில் தலை வைப்பது படுப்பதும் நல்லது இல்லையாம்.
News November 13, 2025
கனமழை: நாளை 16 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

இன்றிரவு செங்கை, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தி.மலை, விழுப்புரத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. காலையும் மழை நீடித்தால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில், நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும்.


