News April 7, 2024
பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்ன் தாரனில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை அவரின் குடும்பத்தினர் சம்மதம் இன்றி திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்து, இளைஞரின் தாயாரை பெண்ணின் குடும்பத்தினர் தாக்கி அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்றனர். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News February 1, 2026
BUDGET UPDATE: வே2நியூஸில் இணைந்திருங்கள்..

நாடே உற்றுநோக்கும் மத்திய பட்ஜெட்டை இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார் தமிழகத்தை சேர்ந்த FM நிர்மலா சீதாராமன். நமது வீட்டில் நடக்கும் வரவு, செலவு கணக்கிலும் இந்த பட்ஜெட்டானது நேரடி மற்றும் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News February 1, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 நாள்களில் தலைகீழாக குறைந்துள்ளது. கடந்த 30-ம் தேதி 1 அவுன்ஸ் $5,500 ஆக இருந்த தங்கம் இன்று $4,893 ஆக உள்ளது. $607(₹55,651) குறைந்ததன் விளைவாகவே இந்திய சந்தையில் <<19013254>>தங்கம் விலை மளமளவென<<>> குறைந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து டாலர் பக்கம் திரும்பியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.
News February 1, 2026
மத்திய பட்ஜெட்: சரசரவென குறைந்தது

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் செயல்படுகின்றன. சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து 25,335-க்கும், சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 82,395-க்கு வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


